இந்நிலையில், பிப்ரவரி 19-ம் தேதி முதல் மதுரை – போடி ரயில் காலை 8.05 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு தேனிக்குக் காலை 9.35 மணிக்கு வந்து, அங்கிருந்து காலை 10.30 மணிக்கு போடி சென்றடையும். இதேபோல போடியில் 5.50 மணிக்குப் புறப்படும் ரயில் தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக மதுரை ரயில் நிலையத்துக்கு இரவு 7.50 மணிக்கு வரவிருக்கிறது.
இதுபோக வண்டி எண் 20601, சென்னை சென்ட்ரலில் இருந்து 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து அங்கிருந்து 9.35 மணிக்கு போடி வந்தடையும் எனவும், வண்டி எண் 20602 போடி ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து அங்கிருந்து மறுநாள் காலை 7.55 மணிக்குச் சென்னை சென்றடையும் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்திடம் பேசினோம். “ஏற்கெனவே பரிசீலனையிலிருந்த திட்டத்துக்கு தெற்கு ரயில்வே அப்ரூவல் வழங்கியுள்ளது. இந்தத் தகவல் உறுதியானதுதான் என்ற போதிலும் மதுரைக் கோட்டத்துக்கு இதுவரை முறையான உத்தரவுகள் வரவில்லை. விரைவில் அதற்கான உத்தரவுகள் கிடைத்துவிடும். அப்படிக் கிடைத்துவிட்டால் சென்னை டு போடி ரயில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், போடி டு சென்னை ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளிலும் இயக்கப்படும்” என்றனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvdHJhdmVsL21hZHVyYWktdG8tYm9kaS1hbmQtYm9kaS10by1jaGVubmFpLXRyYWlucy1hcmUtdG8tYmUtc3RhcnRlZC1zb29u0gFvaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvdHJhdmVsL21hZHVyYWktdG8tYm9kaS1hbmQtYm9kaS10by1jaGVubmFpLXRyYWlucy1hcmUtdG8tYmUtc3RhcnRlZC1zb29u?oc=5