சென்னை திரும்பும் பொதுமக்கள்.. சுங்கச்சாவடியில் இலவச அனுமதி! – வெப்துனியா

சென்னைச் செய்திகள்

பொங்கல் விடுமுறைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் சென்னை திரும்பி கொண்டு இருப்பதால் பெரும் போக்குவரத்தினருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

 சென்னையை நோக்கி ஏராளமான வாகனங்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நீண்ட வரிசை நிற்பதை அடுத்து பரனுர் உள்பட ஒரு சில சுங்கச்சாவடிகளில் வாகன கட்டணங்கள் பெறாமல் வாகனங்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. 

 

மேலும் சென்னையின் புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் வாகனங்கள் ஊர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 

பொங்கல் விடுமுறை கடந்த 12ஆம் தேதியிலிருந்து விடப்பட்ட நிலையில் இன்று பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற அனைவரும் சென்னை திரும்பி வருகின்றனர் என்பதும் நாளை முதல் சென்னையில் இயல்பு வாழ்க்கை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Edited by Siva

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMic2h0dHBzOi8vdGFtaWwud2ViZHVuaWEuY29tL2FydGljbGUvcmVnaW9uYWwtdGFtaWwtbmV3cy9iaWctdHJhZmZpYy1pbi1jaGVubmFpLWFuZC1wZXJ1bmdhbGF0aHVyLTEyMzAxMTgwMDAwM18xLmh0bWzSAQA?oc=5