பீகாரை சேர்ந்தவர் இனசேர் ஆலாம் வயது 27. சென்னை திரிசூலம் பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்கிறார். கட்டடத்தின் 2வது மாடியில் பூச்சு வேலை செய்துகொண்டிருந்தார். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி தோட்டா அவரது காலை துளைத்தது. வலியால் துடித்தவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தோட்டாவை டாக்டர்கள் பாதுகாப்பாக அகற்றினர். அது மத்திய தொழில் பாதுகாப்பு படை பயன்படுத்தும் தோட்டா என்பதை போலீஸ் கண்டுபிடித்தது. அருகில் உள்ள குட்ட மலையில் வீரர்கள் பயிற்சி எடுத்தபோது தவறுதலாக பாய்ந்த குண்டு பீகார் வாலிபர் காலை துளைத்ததும் தெரியவந்தது. விசாரணை தொடர்கிறது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiOWh0dHBzOi8vbS5kaW5hbWFsYXIuY29tL3ZpZGVvX2RldGFpbC5waHA_aWQ9MjM5NTYxJmNhdD0zMtIBAA?oc=5