சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் பிப்.,21ம் தேதி முதல் 8 நாட்கள் சென்னை முதல் மதுரை வரை ‛தமிழைத் தேடி’ என்ற பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் ‘எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்’ என்பது தான் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் நிலைப்பாடும், எதிர்பார்ப்பும் ஆகும். ஆனால், தமிழகத்தில் ‘எங்கே தமிழ்?’ என்பது தான் எதார்த்தம். தமிழக அரசின் அரசாணைகளில் முழுமையாக தமிழ் இல்லை. கோவில்களில் தமிழ் ஒற்றை வழிபாட்டு மொழியாகவில்லை, சமஸ்கிருதத்தில் மட்டும்தான் வழிபாடு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் தமிழ் மொழி தொடர்பான அனைத்து கோரிக்கைகைளையும் நிறைவேற்ற வலியுறுத்தி, ‛தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் பிரசார பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். உலக தாய்மொழி தினமான பிப்ரவரி 21ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் துவங்கும் இந்த பிரசார பயணம் மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ் பல்கலை, திருச்சி, திண்டுக்கல் வழியாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிப்.,28ம் தேதி முடிவடையும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
கடலூரில் பா.ஜ., மாநில செயற்குழு கூடியது
எப்படி இருக்கிறது புதிய பார்லிமென்ட் கட்டடம்?: உட்புற தோற்ற படங்கள் வெளியானது(5)
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMjIyODPSAQA?oc=5