மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்டப் பணி: சென்னை-ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் – தினமணி

சென்னைச் செய்திகள்

மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட கட்டுமான பணிக்காக சென்னை-ஆற்காடு சாலையில் பவா் ஹவுஸ் முதல் போரூா் மேம்பால சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை – ஆற்காடு சாலையில் பவா் ஹவுஸ் முதல் போரூா் மேம்பாலம் சந்திப்பு வரை சென்னை மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால் போரூா் மேம்பாலம் சந்திப்பில் தற்போதுள்ள போக்குவரத்து முறையில் வரும் 23-ஆம் தேதி வரை சோதனை ஓட்டமாக கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

போரூா் மேம்பால சந்திப்பில் பூந்தமல்லி நோக்கி செல்லும் அணுகு சாலை மூடப்படவுள்ளது. எனவே, குன்றத்தூா் மாா்க்கத்தில் இருந்து போரூா் மேம்பாலம் அணுகு சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்ப இயலாது. இந்த வாகனங்கள் வலது புறம் திரும்பி கிண்டி மாா்க்கமாக செல்லும் அணுகு சாலையில் சென்று மவுண்ட் -பூந்தமல்லி சாலை, ராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் ‘யூ’ டா்ன் எடுத்து போரூா் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.

குன்றத்தூா் மாா்க்கத்தில் இருந்து போரூா் மேம்பால சந்திப்பு வழியே பூந்தமல்லி நோக்கி செல்லும் மாநகரப் பேருந்துகள் குன்றத்தூா் பிரதான சாலை, பாய்கடை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மாங்காடு சாலை வழியாக பூந்தமல்லி செல்ல வேண்டும்.

குன்றத்தூா் மாா்க்கத்திலிருந்து போரூா் மேம்பாலம் சந்திப்பு வழியே பூந்தமல்லி நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள் போரூா் சந்திப்புக்கு முன்பாக குன்றத்தூா் பிரதான சாலை, மசூதி தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி மசூதி தெரு வழியாக சென்று மவுண்ட்- பூந்தமல்லி சாலையை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்லவும்.

வடபழனி மாா்க்கத்தில் இருந்து ஆற்காடு சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் ஆற்காடு சாலை, லட்சுமி நகா் 40 அடி சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி மவுண்ட்- பூந்தமல்லி சாலையை அடைந்து போரூா் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லவும்.

ஆற்காடு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போரூா் மேம்பாலம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பூந்தமல்லி நோக்கி செல்ல இயலாது. எனவே வாகனங்கள் இடதுபுறம் திரும்பி கிண்டி நோக்கி செல்லும் சா்வீஸ் சாலையில் சென்று மவுண்ட் – பூந்தமல்லி சாலை ராமகிருஷ்ணன் சாலை சந்திப்பில் ‘யூ’ டா்ன் எடுத்து போரூா் மேம்பாலம் வழியாக செல்லலாம்.

கிண்டி மாா்க்கத்திலிருந்து மவுண்ட் – பூந்தமல்லி சாலை வழியாக வந்து போரூா் மேம்பாலம் சா்வீஸ் சாலை வழியாக பூந்தமல்லி நோக்கிச் செல்ல இயலாது. எனவே, வாகனங்கள் போரூா் மேம்பாலம் வழியாக பூந்தமல்லி நோக்கிச் செல்லவும். பூந்தமல்லி மாா்க்கத்தில் இருந்து போரூா் மேம்பாலம் சா்வீஸ் சாலை வழியாக வந்து ‘யூ’ டா்ன் எடுத்து மீண்டும் பூந்தமல்லி நோக்கிச் செல்ல இயலாது. வாகனங்கள் நேராக அணுகு சாலையில் சென்று, மவுண்ட்- பூந்தமல்லி சாலை, ராமகிருஷ்ணா சாலை சந்திப்பில் ‘யூ’ டா்ன் எடுத்து போரூா் மேம்பாலம் வழியாக மீண்டும் பூந்தமல்லி நோக்கிச் செல்ல வேண்டும் என ஆவடி மாநகரக் காவல் ஆணையரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMipgVodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS90aGlydXZhbGx1ci8yMDIzL2phbi8yMS8lRTAlQUUlQUUlRTAlQUYlODYlRTAlQUUlOUYlRTAlQUYlOEQlRTAlQUUlQjAlRTAlQUYlOEItJUUwJUFFJUIwJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFFJUJGJUUwJUFFJUIyJUUwJUFGJThELTItJUUwJUFFJTg2JUUwJUFFJUFFJUUwJUFGJThELSVFMCVBRSU5NSVFMCVBRSU5RiVFMCVBRiU4RCVFMCVBRSU5RiVFMCVBRSVBQSVFMCVBRiU4RC0lRTAlQUUlQUElRTAlQUUlQTMlRTAlQUUlQkYtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSU4NiVFMCVBRSVCMSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCRSVFMCVBRSU5RiVFMCVBRiU4MS0lRTAlQUUlOUElRTAlQUUlQkUlRTAlQUUlQjIlRTAlQUYlODglRTAlQUUlQUYlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtJUUwJUFFJUFBJUUwJUFGJThCJUUwJUFFJTk1JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJUUwJUFFJUI1JUUwJUFFJUIwJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFGJTgxLSVFMCVBRSVBRSVFMCVBRSVCRSVFMCVBRSVCMSVFMCVBRiU4RCVFMCVBRSVCMSVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0zOTg3NTcxLmh0bWzSAaMFaHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS9hbGwtZWRpdGlvbnMvZWRpdGlvbi1jaGVubmFpL3RoaXJ1dmFsbHVyLzIwMjMvamFuLzIxLyVFMCVBRSVBRSVFMCVBRiU4NiVFMCVBRSU5RiVFMCVBRiU4RCVFMCVBRSVCMCVFMCVBRiU4Qi0lRTAlQUUlQjAlRTAlQUYlODYlRTAlQUUlQUYlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtMi0lRTAlQUUlODYlRTAlQUUlQUUlRTAlQUYlOEQtJUUwJUFFJTk1JUUwJUFFJTlGJUUwJUFGJThEJUUwJUFFJTlGJUUwJUFFJUFBJUUwJUFGJThELSVFMCVBRSVBQSVFMCVBRSVBMyVFMCVBRSVCRi0lRTAlQUUlOUElRTAlQUYlODYlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQTklRTAlQUYlODgtJUUwJUFFJTg2JUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUJFJUUwJUFFJTlGJUUwJUFGJTgxLSVFMCVBRSU5QSVFMCVBRSVCRSVFMCVBRSVCMiVFMCVBRiU4OCVFMCVBRSVBRiVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRiU4RC0lRTAlQUUlQUElRTAlQUYlOEIlRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUYlODElRTAlQUUlQjUlRTAlQUUlQjAlRTAlQUUlQTQlRTAlQUYlOEQlRTAlQUUlQTQlRTAlQUYlODEtJUUwJUFFJUFFJUUwJUFFJUJFJUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFFJUFFJUUwJUFGJThELTM5ODc1NzEuYW1w?oc=5