இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை மாநகரில் கள ஆய்வை மேற்கொண்டு , உலக வங்கி ஆய்வறிக்கை ஒன்றை வெயிட்டிருக்கிறது. அந்த ஆய்வறிக்கையில், ஒரு நாளில் சென்னை மாநகர் முழுவதும் 100 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தால் திருவொற்றியூர் முதல் கோயம்பேடு வரையிலான 159 A பேருந்து வழித்தடம், 7F இயக்கப்படும் பாரிமுனை – அண்ணாநகர் உள்ளிட்ட 29 வழித்தடங்களில் சென்னை மாநகரப் பேருந்துகளை இயக்குவது சிரமம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலக வங்கி நேரடியாக மேற்கொண்ட இந்த கள ஆய்வின் மூலம், சென்னையில் மழை பெய்தால் அ வடபழனி, மந்தவெளி, வியாசார்பாடி, டி.நகர், அண்ணாநகர் மேற்கு, அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய 6 பேருந்து நிலையங்கள் அதிக அளவில் நீர் தேங்கி குளம்போல் மாறிவிடும்
இந்த ஆய்வறிக்கையின் மூலம், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை மாநகரின் ஒருங்கிணைந்த போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்களை அமைக்கவும், காவல்துறையினர், மாற்றுப் பாதைகளை உடனடியாக ஏற்பாடு செய்யவும் வழிவகை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvdGFtaWxuYWR1L2RldGFpbGVkLXJlcG9ydC1hYm91dC1yYWluZmFsbC1naXZlbi1ieS10aGUtd29ybGQtYmFuay1hZnRlci1hbmFseXNpbmctY2hlbm5hadIBf2h0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL2FtcC9zdG9yeS9uZXdzL3RhbWlsbmFkdS9kZXRhaWxlZC1yZXBvcnQtYWJvdXQtcmFpbmZhbGwtZ2l2ZW4tYnktdGhlLXdvcmxkLWJhbmstYWZ0ZXItYW5hbHlzaW5nLWNoZW5uYWk?oc=5