சென்னை அண்ணாசாலையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தின் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு….
சாப்ட்வேர் இன்ஜினியரான இளம் பெண் ஒருவர்…படித்து முடித்த கையோடு சாப்டுவேர் நிறுவனத்தில் கிடைத்த வேலைக்காக கடந்த டிசம்பர் மாதம் தான் சென்னை வந்துள்ளார்.
சொந்த ஊரில் இருந்து சென்னை வந்து பல கனவுகளுடன் பறக்க காத்திருந்த பெண், இரு மாதங்களுக்குள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மனதை கலங்க செய்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் பத்மபிரியா. பொறியியல் படிப்பு படித்த இவருக்கு, சென்னை க்ரீன்வேல்ஸ் சாலையில் உள்ள சாப்டுவேர் நிறுவனத்தில் கடந்த டிசம்பர் மாதம் வேலை கிடைத்துள்ளது. இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் பம்மலில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கிய இவர், தினமும் மெட்ரோ ரயிலில் பணிக்கு சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில், சென்னை அண்ணாசலை அருகே உள்ள பழைய கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்துள்ளது. முறையான முன்னறிவிப்பு இல்லாமல், பாதுகாப்பு பதாகைகள் வைக்காமல், ஆபத்தான முறையில் ஜேசிபி மூலம் கட்டடம் இடிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் காலை 8 மணியளவில் அண்ணாசாலையில் உள்ள சுரங்கப்பாதை அருகே பத்மாபிரியா நடந்து சென்றுள்ளார். அப்போது, கட்டிட இடிப்பு பணியின் போது, கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர், திடீரென பத்மாபிரியாவின் மீது விழுந்து பலத்த சப்தம் கேட்டுள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiR2h0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvY2hlbm5haS1idWlsZGluZy1jb2xsYXBzZWQtMTY0Mjcz0gFLaHR0cHM6Ly93d3cudGhhbnRoaXR2LmNvbS9hbXAvbGF0ZXN0LW5ld3MvY2hlbm5haS1idWlsZGluZy1jb2xsYXBzZWQtMTY0Mjcz?oc=5