சென்னையில் காணாமல் போன 77 வயது மூதாட்டியை 2 மணி நேரத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்து கொடுத்தனர்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜம் என்கின்ற ராஜேஸ்வரி (77) வீட்டில் இருந்த இவர் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென காணாமல் போயிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருடைய உறவினர்கள் பல பகுதிகளிலும் தேடி இருக்கிறார்கள்.
வயது மூப்பின் காரணமாக ராஜமுக்கு ஞாபக மறதி குறைபாடு உள்ளதாகவும் எனவே அவரை கண்டுபிடித்து தருமாறு அரும்பாக்கம் காவல் நிலையத்தில் குடும்பத்தார் நேற்று இரவு 8.30 மணி அளவில் புகார் அளித்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
புகாரை பெற்றவுடன் உடனடியாக ராஜமுடைய புகைப்பட விவரங்கள் ஆகியவற்றை சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய வாட்ஸ் ஆப் குரூப்பிலும் அனுப்பி இருக்கிறார்கள். அதே போல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.
காவலர்கள் வாட்ஸ் ஆப் குரூப்பில் ராஜத்தினுடைய புகைப்படத்தை பார்த்த வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர் ஒருவர் புகைப்படத்தில் உள்ள மூதாட்டி ராஜேஸ்வரியை தண்டையார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே இரவு 11 மணி அளவில் கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அதன் மூலமாக ராஜேஸ்வரியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குடும்பத்தாருடன் சென்று ராஜேஸ்வரியை மீட்டுள்ளனர். அரும்பாக்கத்தில் இருந்து தண்டையார்பேட்டை வரை ராஜேஸ்வரி எப்படி சென்றார்கள் என்பது குறித்து ராஜேஸ்வரியால் விளக்க முடியவில்லை. மேலும் பேருந்தில் ஏரி சென்றாரா? அல்லது ரயிலில் ஏறி சென்றாரா? என்பதை கூட அவரால் தெரிவிக்க முடியவில்லை. வயதான முதியவர்கள் மற்றும் ஞாபக மறதி குறைபாடு உள்ள முதியவர்களை காணாமல் போனால் அவர்களை எளிதாக மீட்பது எப்படி என்பது குறித்து யோசித்து ஒரு நூதன முறையை கையாண்டு இருக்கிறார் அரும்பாக்கம் காவல்துறை உதவி ஆய்வாளர் பிரகாஷ்.
அதன்படி ராஜேஸ்வரிக்கு, சுமார் 400 ரூபாய் கொடுத்து இரண்டு வளையல்களை வாங்கி அந்த வளையல்களில் காணாமல் போனால் எளிதாக அவர்களது குடும்பத்தாரை தொடர்பு கொள்ளும் வகையில் குடும்பத்தாரினுடைய தொலைபேசி எண்ணை வளையல்களில் எண்களாக பொறித்து கொடுத்திருக்கிறார்.
இதன் மூலமாக வயதானவர்கள் காணாமல் போகும் பட்சத்தில் அவர்களுடைய வளையல்களில் குறிக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணை வைத்து எளிதாக அவர்களது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு முதியவர்களை மிக உதவியாக இருக்கும் என்கிறார் அரும்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர்.
ராஜேஸ்வரியை இரண்டு மணி நேரத்தில் கண்டுபிடித்த சென்னை மாநகர காவல் துறையால் அவரது குடும்பத்தார் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மாநகர காவல் துறை அரும்பாக்கம் போலீசாரின் இந்த செயலை பாராட்டி கடமைக்கு ஒருபோதும் விடுமுறை கிடையாது எனவும் இரண்டு மணி நேரத்தில் மாயமான மூதாட்டியை கண்டுபிடித்த கொடுத்த அரும்பாக்கம் போலீசாருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWmh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvY2hlbm5haS1taXNzaW5nLW9sZC1sYWR5LWZpbmQtaW4tMi1ob3Vycy04ODEyMDYuaHRtbNIBXmh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy9jaGVubmFpL2NoZW5uYWktbWlzc2luZy1vbGQtbGFkeS1maW5kLWluLTItaG91cnMtODgxMjA2Lmh0bWw?oc=5