சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் கடையின் இரும்புக் கதவு விழுந்து 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தனியார் கடையில் பணியாற்றும் தந்தையை பார்க்க தாயுடன் சென்றபோது சிறுமி மீது கதவு விழுந்தது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
இதையும் படிக்க: ஈரானில் நிலநடுக்கம்: 7 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiY2h0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMjkvY2hlbm5haS1naXJsLWRpZXMtYWZ0ZXItaXJvbi1kb29yLWZhbGxzLTM5OTE5OTcuaHRtbNIBYGh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjMvamFuLzI5L2NoZW5uYWktZ2lybC1kaWVzLWFmdGVyLWlyb24tZG9vci1mYWxscy0zOTkxOTk3LmFtcA?oc=5