சென்னை: கேரள மாநிலம் மூணாறில் தற்போது உச்சக்கட்ட சுற்றுலா சீசன் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து 7 பேர் கொண்ட குழுவினர் மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் மூணாறு அருகே சித்ராபுரத்தில் உள்ள தனியார் சுற்றுலா விடுதியில் தங்கியுள்ளனர்.
நேற்று காலை இக்குழுவில் உள்ள சரண் (24), தனது நண்பருடன் சேர்ந்து சித்ராபுரம் அருகே கல்லடி வளைவு என்ற பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது, குளத்தில் மூழ்கிய சரண் மீண்டும் வெளியே வரவில்லை. உடன் வந்த நண்பர் தண்ணீரில் மூழ்கி தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தகவலறிந்து வந்த அடிமாலியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், வெள்ளத்தூவல் போலீசார் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணிநேரத்திற்கு பின்பு சரணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzQ0MTfSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzNDQxNy9hbXA?oc=5