சென்னையில், ‘ஜி – 20’ கல்வி மாநாடு கருத்தரங்கம் நடப்பதால், மூன்று நாட்களுக்கு, ‘ட்ரோன்’ பறக்கவிட, தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், மகாபலி புரத்தில், இன்று துவங்கி, பிப்., 2 வரை, ஜி – 20 கல்வி மாநாடு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், 29 நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இவர்கள், சென்னையில் உள்ள, தாஜ் கோரமண்டல், தாஜ் கன்னிமாரா, ஹயாத், தாஜ் கிளப் ஹவுஸ் மற்றும் ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்கா ஆகிய இடங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர். பிப்., 1ல், மகாபலிபுரத்தில், ‘யுனெஸ்கோ’ சார்பில் நடக்கும் நிகழ்விலும் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டி, சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட, வெளிநாட்டு பிரமுர்கள் மற்றும் பன்னாட்டு பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், அவர்கள் செல்லும் வழித்தடங்கள், விழா நடக்கும் இடங்களை, போலீசார் சிவப்பு மண்டலமாக அறிவித்துஉள்ளனர்.
ஆகையால், சென்னையில் மூன்று நாட்களுக்கு ட்ரோன் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விட, தடை விதிக்கப்பட்டு இருப்பதாக, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.
உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது
மனித உரிமைகள் வார விழா
தொழுநோய் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் துவக்கி வைப்பு
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMzAzNDHSAQA?oc=5