சென்னை,
சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ், சென்னையில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளும், அனைத்து விதமான ‘பார்’களும் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS90YXNtYWMtc2hvcHMtdG8tYmUtY2xvc2VkLWluLWNoZW5uYWktb24tNXRoLTg5MDYzMtIBXmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvdGFzbWFjLXNob3BzLXRvLWJlLWNsb3NlZC1pbi1jaGVubmFpLW9uLTV0aC04OTA2MzI?oc=5