இந்தியாவின் முதல் மல்டிபிளக்ஸ்: சென்னை விமான நிலையத்தில் நியூ அப்டேட் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பி.வி.ஆர்.,இன் திரையரங்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புது வசதி, சென்னை விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 1,155 பார்வையாளர்களை உள்ளடக்கும் அளவிற்கு கட்டப்பட்டிருக்கும் இந்த திரையரங்கில், 2K RGB+ லேசர் ப்ரொஜெக்டர்கள், ரேஸர் ஷார்ப், அல்ட்ரா-ப்ரைட் படங்கள் மற்றும் மேம்பட்ட டால்பி அட்மாஸ் உயர் வரையறை அதிவேக ஆடியோவுக்கான REAL D 3D டிஜிட்டல் ஸ்டீரியோஸ்கோபிக் ப்ரொஜெக்ஷன் உள்ளிட்ட அதிநவீன சினிமா தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், PVR சினிமாஸ் சென்னையில் 77 திரைகளுடன் 12 கிளையாக மாறியிருக்கும். மேலும், தமிழ்நாட்டில் 14 கிளைகள் 88 திரைகளுடன் மாறியுள்ளது. தென்னிந்தியாவில் அதன் திரை எண்ணிக்கை 53 கிளைகளுடன் 328 திரையரங்குகளாக இருக்கிறது.

PVR நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜய் பிஜிலி கூறுகையில், “எங்கள் 14வது கிளை தமிழ்நாட்டில் திறக்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி திட்டங்களில் எங்கள் பங்களிப்பை குறிப்பிடுகிறோம்.

பொழுதுபோக்கு என்பது நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது, இன்றைய நுகர்வோர் பணமில்லாதவர்கள், நேரமில்லாதவர்கள் ஆக இருக்கிறார்கள். எனவே, பயணிகள் தங்களது ஓய்வு நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த திரைப்படங்களைப் பார்ப்பதை விட சிறந்த வழி எதுவுமில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicGh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L3B2ci1jaW5lbWFzLWxhdW5jaGVzLWluZGlhcy1maXJzdC1tdWx0aXBsZXgtaW4tY2hlbm5haS1haXJwb3J0LTU4NzAzOS_SAXVodHRwczovL3RhbWlsLmluZGlhbmV4cHJlc3MuY29tL3RhbWlsbmFkdS9wdnItY2luZW1hcy1sYXVuY2hlcy1pbmRpYXMtZmlyc3QtbXVsdGlwbGV4LWluLWNoZW5uYWktYWlycG9ydC01ODcwMzkvbGl0ZS8?oc=5