ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பேர் பயணமா?சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட தகவல் – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

இதன்படி, கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தை விட, சுமார் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர், மெட்ரோவில் அதிகமாக பயணித்துள்ளதாக, சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், பாதுகாப்பு வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக, ஆறு கோடியே ஒன்பது லட்சம் பேர் சென்னை மெட்ரோவில் பயணித்துள்ளனர். மேலும், ஜனவரி மாதத்தில் மட்டும் க்யூஆர் கோட் வசதியை பயன்படுத்தி, சுமார் 22 லட்சம் பேர் மெட்ரோவில் பயணித்துள்ளதாக, சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMikgFodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2xhdGVzdC1uZXdzL3NvLW1hbnktbGFraC1wZW9wbGUtdHJhdmVsLWluLWEtc2luZ2xlLW1vbnRoLWluZm9ybWF0aW9uLXJlbGVhc2VkLWJ5LXRoZS1jaGVubmFpLW1ldHJvLWFkbWluaXN0cmF0aW9uLTE2NTIyN9IBlgFodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2FtcC9sYXRlc3QtbmV3cy9zby1tYW55LWxha2gtcGVvcGxlLXRyYXZlbC1pbi1hLXNpbmdsZS1tb250aC1pbmZvcm1hdGlvbi1yZWxlYXNlZC1ieS10aGUtY2hlbm5haS1tZXRyby1hZG1pbmlzdHJhdGlvbi0xNjUyMjc?oc=5