சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் உள்பட 8 ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் உள்பட 8 ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயணிகள் வரத்து குறைந்ததால், கீழ்க்கண்ட 8 சிறப்பு ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

* புனலூர் – குருவாயூர் (வண்டி எண்:06327), குருவாயூர்-புனலூர் (06328), குருவாயூர் – திருவனந்தபுரம் (06341), திருவனந்தபுரம்-குருவாயூர் (06342), சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் (06105), சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் – மேட்டுப்பாளையம் (02671) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* திருச்செந்தூர் – எழும்பூர் (06106), மேட்டுப்பாளையம்- சென்டிரல் (02672) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் நாளை மறுதினம் (18-ந்தேதி) முதல் ஜூன் 1-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/05/16005503/8-trains-including-Chennai-EgmoreThiruchendur-canceled.vpf