சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து ஆறுதல் அளிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தை புரட்டி எடுத்தது. 31,000-க்கும் மேல் பாதிப்பு என்று கொரோனா உச்சத்தில் இருந்தது.
தற்போது கொரோனா வெகுவாக குறைந்து விட்டது. அதாவது 2,000-க்குள் கொரோனா தொற்று குறைந்து விட்டது. தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததால்தான் கொரோனா தொற்று இந்த அளவுக்கு குறைவாக வந்துளளது.
முதன்முறை தமிழகத்தில் ரூ.100-ஐ கடந்தது டீசல் விலை.. பெட்ரோல் ரூ.102.10..அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்
கட்டுப்பாடுகள் தொடர்கின்றன
கொரோனாவை தடுக்கும் பேராயுதமான தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் தற்போது கொரோனா 2,000-க்கும் கீழ் குறைந்து விட்டது.கோவை, சென்னையில் குறைவு கொரோனா குறைந்து விட்டாலும் தமிழக்கத்தில் சில கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்களுக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் தொடங்கி விட்டதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதுள்ளது.
தீபவாளி பண்டிகை
தீபவாளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் மக்கள் இப்போது இருந்தே ஆடைகள், பொருட்கள் வாங்க கடைகளுக்கு படையெடுத்து செல்ல ஆரம்பித்து விடுவார்கள். அதுவும் சென்னை என்றால் சொல்லவே வேண்டாம். தீபாவளி நேரங்கில் சென்னையில் உள்ள தியாகராயர் நகர் சாலை உள்ளிட்ட பெரும்பலான இடங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
இந்த நிலையில் கொரோனாவை கருத்தில் கொண்டு கடைகளில் மக்களை கூட்டமாக அனுமதிக்க கூடாது என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பண்டிகை காலத்தில் பொருட்கள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து கொள்வதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சென்னை மாநகராட்சி உத்தரவு
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள், அங்காடிகள் மீதும், முகக் கவசம் அணியாத நபர்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் ஒவ்வொருவரும் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ளத் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-has-ordered-that-people-should-not-be-allowed-to-congregate-in-shops-considering-435784.html