சென்னை: நவம்பர் மாதத்தில் வழக்கமான மழை அளவைவிட சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவுக்கு மழை பெய்துள்ளது.
இது தொடர்பான புள்ளி விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் எதிரொலியாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்து மொத்தம் ஐந்து நாட்கள் தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
இதன் காரணமாக நவம்பர் மாதத்தில் வழக்கமாக பதிவாகும் மழை அளவை விடவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிக அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் – 4 நாட்களுக்கு கனமழை – குமரி, நீலகிரியில் மழை வெளுக்கும்
சென்னை மழை
உதாரணத்திற்கு, சென்னையில் அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை வழக்கமாக சராசரியாக 21.2 மில்லி மீட்டர் மழை பெய்யும். இந்த வருடம் 58.2 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கமாக இதே காலகட்டத்தில் 16.1 மில்லிமீட்டர் மழை பெய்யும் இந்தமுறை 62.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
கன்னியாகுமரி மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வழக்கமாக சராசரியாக 7.2 மில்லி மீட்டர் மழை பெய்யும் இந்தமுறை 71.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
வரைபடம்
அதேநேரம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்தை விடவும் குறைவாக மழை பதிவாகி உள்ளது. இது தொடர்பான புள்ளி விவரத்தை நீங்கள் வரைபடத்தில் பார்க்க முடியும்.
சென்னை மழை
சென்னையை பொறுத்த அளவில் 1918ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை 1088 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதன் பிறகு 2015 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை 1049 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்த வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை சென்னை 810.4 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதுவரை 1918ஆம் ஆண்டு பதிவான மழையளவு சாதனை அளவாக தொடர்கிறது என்பது குறிபிடத்தக்கது.
வட சென்னை அதிகம்
தற்போதைய மழை காலத்தை பொறுத்தளவில், நவம்பர் 7ம் தேதி நுங்கம்பாக்கம் பகுதியில் 20.2 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. கடந்த வியாழக்கிழமை வெறும் 15 நிமிடங்களில் அங்கு 1.2 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. தெற்கு சென்னை பகுதிகளை விடவும் இந்த முறை வடக்கு சென்னை பகுதிகளில் அதிக மழை பெய்தது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் இரண்டு சென்டி மீட்டர் அளவுக்கு கடந்த வியாழக்கிழமை எண்ணூர் துறைமுகம் பகுதியில் மழை பதிவாகியுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/rain-graphics-for-tamil-nadu-and-chennai-reflects-more-rains-received-this-year-438838.html