பராமரிப்பு பணி: சென்னை – கோவை இடையே 6 ரயில்கள் ரத்து – தினமணி

சென்னைச் செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக சென்னை – கோவை இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் – சேலம் (22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் நாளை, டிச.1,2-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் – எழும்பூர் (22154) இடையே இரவு 9 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்  டிச.1,2,3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் – கோவை (12679) இடையே மதியம் 2.30  மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்  டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை – சென்னை சென்ட்ரல் (12680) இடையே காலை 6.15   மணிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில்  டிச.3-ல்  முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் – கோவை (12675) இடையே காலை 6.10   மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்  டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை – சென்னை சென்ட்ரல் (12676) இடையே மதியம் 3.15   மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்  டிச.3-ல்  முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் – கோவை (12243) இடையே காலை 7.10   மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்  டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை – சென்னை சென்ட்ரல் (12244) இடையே மதியம் 3.05    மணிக்கு இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில்  டிச.3-ல்  முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicGh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9ub3YvMjkvbWFpbnRlbmFuY2Utd29yay1jaGVubmFpLWNvaW1iYXRvcmUtdHJhaW5zLWNhbmNlbGxlZC0zOTU3OTk2Lmh0bWzSAW1odHRwczovL20uZGluYW1hbmkuY29tL3RhbWlsbmFkdS8yMDIyL25vdi8yOS9tYWludGVuYW5jZS13b3JrLWNoZW5uYWktY29pbWJhdG9yZS10cmFpbnMtY2FuY2VsbGVkLTM5NTc5OTYuYW1w?oc=5