தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை விட 6,299 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்ற பிரியா ராஜன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி ஆவார். இவரது தந்தை பி.ராஜன், அப்பகுதியின் தி.மு.க துணைச்செயலாளராக இருந்து வருகிறார். 28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி, 1957 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் முறையே தாரா செரியன் மற்றும் காமாட்சி ஜெயராமன் ஆகிய இரு பெண் மேயர் பதவியை அலங்கரித்துள்ளனர். தற்போது மூன்றாவது பெண் மற்றும் முதல் பட்டியலின பெண் மேயராக பிரியா ராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் இதற்கு முன்பு தென் சென்னையை சேர்ந்தவர்களே திமுக சார்பில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வட சென்னையை பிரியா முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் சேகர்பாபு பொறுப்பு வகிக்கும் வடசெனை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தாம்பரம் மேயராக கல் உடைக்கும் தொழிலாளியின் மகள்! முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா?
இந்தநிலையில், பிரியா ராஜனின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. அவருக்கு ரூ.8,24,941 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. அசையா சொத்து மற்றும் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்துகள் அவரிடம் இல்லை.
அவரது கணவர் ராஜாவிடம் ரூ.3,80,179 மதிப்பிலான அசையும் சொத்து உள்ளன. அசையா சொத்துகள் எதுவும் அவரிடம் இல்லை. சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தின் விலை மதிப்பு ரூ.67,500-ஆக உள்ளது. சுய சம்பாத்திய சொத்து மொத்த மதிப்பு ரூ.1,25,000 ஆக உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.5,05,179 ஆக உள்ளது. மேயர் பிரியா ராஜன் தனது வேட்புமனு தாக்கலின் போது இந்த விபரங்கள வழங்கியுள்ளார்.
Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/property-details-of-chennai-mayor-priya-rajan/articleshow/90004577.cms