சென்னை: செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து நீர் திறப்பு- மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! – Vikatan

சென்னைச் செய்திகள்

மேலும், ஏரிக்கும் வரும் நீரின் அளவைப் பொறுத்து அதற்குத் தகுந்தாற்போல், வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தண்ணீர் திறக்கப்படவிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அரசு சுற்றறிக்கை

புழல் ஏரிக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்திருப்பதால், ஏரியிலிருந்து உபரிநீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக, விநாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாரவாரிக்குப்பம், புழல், வடகரை உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார்.

Source: https://www.vikatan.com/news/disaster/chennai-rains-flood-warning-issued