முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், கொரோனா இரண்டாம் கட்ட பரவல் காரணமாக தனது சென்னை ஆலையை ஐந்து நாட்கள் நிறுத்தி வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, தமிழகத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட பரவல் பாதிப்பு அதிகம் இருப்பதன் காரணமாக, இந்த உற்பத்தி நிறுத்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு 10 கோடி ரூபாயை கொரோனா நிவாரணமாகக் கொடுத்த ஹூண்டாய்..!!
உற்பத்தி நிறுத்தம்
இந்த நடவடிக்கையானது மே 25 முதல், மே 29 வரையில் 5 நாட்களுக்கு ஆலை உற்பத்தியை, தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு லாக்டவுனை நீட்டிப்பதாக அறிவித்ததையடுத்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா தாக்கம்
தற்போதைய நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 34,867 பேருக்கு தாக்கம் அடைந்துள்ளனர். 404 பேர் பலி எண்ணிக்கையும் அடைந்துள்ளனர். புதிய வழக்குகளுடன் சேர்த்து மொத்தம் 18,77,211 ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கையானது 20,872 ஆகவும் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பணி
தற்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் வெளியே செல்லவும் இ-பதிவு கட்டாயமாக்கபப்ட்டுள்ளது. இந்த நிலையில் லாக்டவுன் காலகட்டத்திலும் தொடர்ந்து செயல்பட ஆட்டோமொபைல் உள்பட சில துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹூண்டாய் ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஊழியர்கள் பாதிப்பு
இதனால் பலர் கொரோனாவினால் தாக்கம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கொரோனாவால் சில ஊழியர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் ஊழியர்கள் தங்களது அச்சம் காரணமாக போராட்ட களத்திலும் குதித்தனர். இதனையடுத்து தான் ஹூண்டாய் நிறுவனம் இப்படியொரு அதிரடியான முடிவினை எடுத்திருப்பதாக தெரிகிறது.
சம்பளம் பிடித்தம் இல்லை
மேலும் இந்த ஐந்து நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. எனினும் ஹூண்டாய் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எதுவும் வெளியிடவில்லை. ஆலை 5 நாட்களுக்கு இயங்காது என்று மட்டும் அறிவித்துள்ளது.
Source: https://tamil.goodreturns.in/news/hyundai-to-shut-down-chennai-plant-for-5-days-from-may-25-2021-023737.html