சென்னை ஏடிஎம்மில் சென்சாரை விரல்கள் மூலம் தடை செய்து பணத்தை எப்படி எடுத்தார்கள்.. சிசிடிவி காட்சி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஏடிஎம் கார்டுகளைக்கொண்டு சென்சாரை விரல்கள் மூலம் தடை செய்து பணத்தை எப்படி கொள்ளையர்கள் எடுத்தார்கள் என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் சுமார் 48 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருக்கிறது. எப்படி திருடினார்கள் என்பது தான் பெரிய திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் செயல்படுகிறது. இங்கு, வங்கி மேனேஜர் முரளிபாபு 2 தினங்களுக்கு முன்பு சென்று கணக்கை சரிபார்த்திருக்கிறார். அப்போது, டெபாசிட் மெஷினில் இருந்து ரூ1.50 லட்சம் கணக்கில் வராமல் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்3

ஏடிஎம் மையம்

உடனே, அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் கடந்த 17ம் தேதி மாலை ஏடிஎம் மையத்திற்கு வந்த ஹெல்மட் அணிந்த இளைஞன் உள்பட இரண்டு பேர் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் வீதம் 15 முறை மொத்தம் ரூ.1.50 லட்சத்தை டெபாசிட் செய்யும் மெஷினில் இருந்து எடுத்து சென்றது பதிவாகி இருந்தது.

20 வினாடி

எப்படி இது சாத்தியம் என்பது குறித்து வங்க அதிகாரிகள் கூறும் போது, நூதனமான முறையில் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றதை ஒப்புக்கொண்டனர் அதாவது பணம் செலுத்தும் மெஷினில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்கும் போது 20 வினாடிகளில் பணத்தை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் உள்ளே சென்றுவிடும். அதன்பின்னர் வாடிக்கையாளர்களின் கணக்கிலேயே அந்த பணத்தை மிசின் வரவு வைத்துவிடும்.

திருடி உள்ளார்கள்

ஆனால் 20 வினாடி முடிந்ததும் பணம் உள்ளே செல்லும் போது, சரியாக சென்சாரை கைகளால் மறைத்து ஷட்டரை அழுத்தி பிடித்து பணத்தை உள்ளே செல்ல விடாமல் எடுத்துள்ளார்கள். ஆனால் பணம் உள்ளே சென்றுவிட்டதாக மெஷின் நினைத்துக்கொள்ளும். இந்த தொழில்நுட்ப குறைபாட்டை பயன்படுத்திதான் நூதனமான முறையில் கைவரிசை காட்டி உள்ளனர்.

போலீசார் வழக்கு

சென்னையில் ராமாபுரம் மட்டுமின்றி விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களில் அதே ஆசாமிகள் 48 லட்சம் ரூபாய்க்கு மேல் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே ஹெல்மெட் அணிந்த இளைஞன் பணத்தை திருடம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

English summary
How they blocked the sensor in the ATM with their fingers and took the money: CCTV footage released by bank

Source: https://tamil.oneindia.com/news/chennai/cctv-footage-money-theft-at-sbi-cash-deposit-atm-in-chennai-424733.html