உலகளவில் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப உதவிகள் உடன் பல புதிய மாற்றங்கள் வந்துள்ள நிலையில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையிலும் பல மாற்றங்கள் வந்துள்ளது.
அப்படி இந்தியாவில் சமீபத்தில் முக்கியமான விஷயமாகப் பேசப்படும் ஒன்று 3டி பிரின்டிங் முறையில் வீடு கட்டுவது.
இந்த வீடு கட்டுமானத்தில் 3டி பிரின்டிங் முறை பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்த நிலையில் ஆனந்த் மஹிந்திரா டிவீட் மூலம் தற்போது இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவில் ஹாட் டாப்பிக் ஆக மாறியுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கியமான விஷயங்கள் இதுதான்..!
அனைவருக்கும் சொந்த வீடு
மோடி அரசு அனைவருக்கும் சொந்த வீடு என்னும் மிகப்பெரிய திட்டத்தை அடைய இந்த 3டி பிரின்டிங் மூலம் கட்டப்படும் வீடுகள் மிகப்பெரிய அளவில் உதவும் என்றால் மிகையில்லை. மேலும் இந்த 3டி பிரின்டிங் முறையில் ஒரு வீட்டை சில நாட்களுக்கு உள்ளேயே கட்டிவிட முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
3டி பிரின்டிங் தொழில்நுட்பம்
உலக நாடுகளில் இந்த 3டி பிரின்டிங் தொழில்நுட்பம் பல வருடங்களாக இருந்தாலும், இந்தியாவில் சமீபத்தில் தான் வந்துள்ளது. ஏற்கனவே எல் அண்ட் டி நிறுவனம் 3டி பிரின்டிங் முறையில் ஒரு வீட்டை கட்டிய நிலையில் ஐஐடி மெட்ரால் கல்லூரி மாணவர்கள் புதிய வீட்டை இத்தொழில்நுட்ப உதவியுடன் கட்டியுள்ளனர்.
ஐஐடி மெட்ராஸ் – Tvasta
ஐஐடி மெட்ராஸ் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் Tvasta என்னும் நிறுவனத்தை உருவாக்கி 3டி பிரின்டிங் முறையில் வெறும் 21 நாளில் முழு வீட்டையும் கட்டியுள்ளது. இந்த வீடு ஐஐடி மெட்ராஸ் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே கட்டப்பட்டு உள்ளது. இந்த வீடு 2021ல் கட்டப்பட்ட நிலையில் ஆனந்த் மஹிந்திரா-வின் கண்களுக்கு இப்போது தான் தென்பட்டு உள்ளது.
ஆனந்த் மஹிந்திரா
இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டு உள்ள டிவிட்டர் பதவில், உலக நாடுகளில் 3டி பிரின்டெட் வீடுகள் குறித்துத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்தியாவிற்கு இதுபோன்ற தொழில்நுட்பம் மிகவும் அரிதானது என நினைக்கும் வேளையில் ஐஐடி மெட்ராஸில் இருந்து உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
இடம் உள்ளதா..?
இதைத் தொடர்ந்து ஆனந்த் மஹிந்திரா தனது டிவீட்டில், Tvasta நிறுவனத்திடம் நீங்கள் கட்டாயம் ஆரம்பக்கட்ட முதலீட்டைத் திரட்டி இருப்பீர்கள் என்பது தெரியும், ஆனாலும் நான் முதலீடு செய்ய ஏதாவது இடம் உள்ளதா என்று ஆசை ஆசையாய் கேட்டு உள்ளார்.
Anand Mahindra loves to invest IIT Madras 3D printing startup Tvasta viral tweet
Anand Mahindra loves to invest IIT Madras 3D printing startup Tvasta viral tweet நல்லா இருக்கே, முதலீடு செய்யச் சான்ஸ் கிடைக்குமா.. ஆனந்த் மஹிந்திரா டிவீட்டால் ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் குஷி..!
Source: https://tamil.goodreturns.in/news/anand-mahindra-loves-to-invest-iit-madras-3d-printing-startup-tvasta-viral-tweet-026678.html