சென்னை: சென்னை போலவே மிகப்பெரிய நகரமாக இருந்தும் கூட பெங்களூர் பெரிய அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி உள்ளது. பெங்களூரிடம் இருந்து சென்னை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் மிக தீவிரமாக ஏற்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று மொத்தம் 1479 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று தான் இதுவரை இல்லாத மிக அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. சென்னையில் மொத்தமாக 28924 கேஸ்கள் இதுவரை பதிவாகி உள்ளது. சென்னையில் மொத்தமாக ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 13906 ஆக உள்ளது.
ஆனால் இன்னொரு பக்கம் பெங்களூரில் மொத்தம் 617 கேஸ்கள் மட்டுமே இதுவரை ஏற்பட்டுள்ளது. அங்கு 27 மரணங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. சென்னை போலவே பெரிய நகரமாக இருந்தும் பெங்களூர் கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளது. பெங்களூர் கொரோனாவை கட்டுப்படுத்த பின் வரும் விஷயங்கள்தான் காரணம் ஆகும்.
சத்தமின்றி சாதனை: 7 நாட்களில் கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம்! உலகிற்கு வழிகாட்டும் தமிழகம்
எப்படி டெஸ்டிங்
இரண்டு நகரங்களிலும் டெஸ்டிங் என்று பார்த்தால் சென்னையில்தான் அதிகமாக டெஸ்டிங் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த ஜூன் 7ம் தேதி வரை 1.22 லட்சம் டெஸ்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. பெங்களூரில் 50 ஆயிரம் டெஸ்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் தினமும் 6000 சோதனைகள் செய்யப்படுகிறது. பெங்களூரில் 2 ஆயிரத்திற்கும் குறைவான சோதனைகளே தினமும் செய்யப்படுகிறது.
ஆனால் என்ன
ஆனால் பெங்களூரில் தொடக்கத்தில் லாக்டவுன் தொடங்கிய போதே வரிசையாக அதிக டெஸ்டிங் எடுத்து உள்ளனர். அதனால் அங்கு வரும் நாட்களில் டெஸ்டிங் அதிகம் தேவைப்படவில்லை. அதே சமயம் சென்னையில் லாக்டவுன் இருந்த நாட்களில் டெஸ்டிங் குறைவாக செய்யப்பட்டது . தற்போதுதான் சென்னையில் துரிதமாக டெஸ்டிங் நடக்கிறது. பெங்களூர் போலவே தொடக்கத்திலேயே டெஸ்டிங்கை முடுக்கிவிட்டு இருந்தால் சென்னையில் இவ்வளவு கேஸ்கள் பரவி இருக்காது.
காண்டாக்ட் டிரேசிங் முறை
காண்டாக்ட் டிரேசிங் முறையில் சென்னையை விட பெங்களூர் சிறப்பாக இருந்தது. சென்னையை விட பெங்களூரில் அதிக மக்கள் தொகை உள்ளது. ஆனாலும் பெங்களூரில் தொடக்கத்தில் இருந்து அதிகமான அளவு காண்டாக்ட் டிரேசிங் செய்யப்பட்டது. சென்னையை போல அல்லாமல் பெங்களூரில் மூன்றடுக்கு மற்றும் நான்கு அடுக்கு காண்டாக்ட் டிரேசிங் செய்யப்பட்டது. சென்னையில் தொடக்கத்தில் காண்டாக்ட் டிரேசிங் தீவிரமாக செய்யப்பட்டாலும் போக போக இதில் தவறுகள் நிகழ்ந்தது.
கன்டெயின்மெண்ட் பகுதிகள்
சென்னையில் தற்போது 200+ கன்டெயின்மெண்ட் பகுதிகள் உள்ளது. பெண்களூரில் 40+ கன்டெயின்மெண்ட் பகுதிகள் உள்ளது. ஆனாலும் பெங்களூர் கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளது. காரணம் அங்கு தொடக்கத்தில் இருந்து லாக்டவுன் மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. நாள் முழுக்க அனைத்து இடங்களிலும் போலீஸ் ரோந்து பணிகளை மேற்கொண்டது. சென்னையில் ஏற்பட்ட கோயம்பேடு கிளஸ்டர் போன்ற தவறுகள் பெங்களூரில் கேஆர் மார்க்கெட் போன்ற இடங்களில் நிகழவில்லை.
தனிமைப்படுத்துதல்
அதேபோல் சென்னையில் தனிமைப்படுத்தும் முகாம்கள், அது தொடர்பான வசதிகள் தொடக்க காலத்தில் சரியாக ஏற்படுத்தப்படவில்லை. சென்னையில் 1900 குடிசை பகுதிகள் இருப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். ஆனால் பெங்களூரில் ஏப்ரல் மாதத்திலேயே மிக அதிகமாக குடிசை பகுதிகள் தொடங்கி அனைவருக்கும் ஏற்ற வகையில் தனிமைப்படுத்தும் முகாம்கள், அரசு இடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இதற்காக பெங்களூரில் தனியாக விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது.
சரியான திட்டமிடல்
கொரோனா பணியில் சென்னையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு ஒருங்கிணைப்பாளர்கள் , ஆலோசகர்கள் இதற்காக நியமனம் செய்யப்பட்டார்கள். இவர்கள் இடையே பெரிய அளவில் தொடர்பு இல்லாததும் ஒருங்கிணைந்த திட்டம் இல்லாததும் கூட கொரோனா பரவ முக்கிய காரணம் ஆகும். பெங்களூரில் ஒருங்கிணைப்பாளர் என்னும் ஒரு தலைமையின் கீழ் எல்லோரும் ஒன்றாக செயல்பட்டு பணிகளை மேற்கொண்டனர். இது தொடக்க கால பரவலை கட்டுப்படுத்தியது.
செம திட்டம்
டெஸ்டிங் என்ற அளவில் சென்னை பெங்களூரை விட சிறப்பாக இருக்கிறது. ஆனால் மற்ற அனைத்து விஷயங்களிலும் சென்னையை விட பெங்களூர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. முக்கியமாக கோயம்பேடு போன்ற தவறுகள் பெங்களூரில் ஏற்படவில்லை. மேலும் தொடக்க காலத்திலேயே பெங்களூரில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்பதும் மிக முக்கியமான விஷயம் ஆகும்.
, பதிவு இலவசம்!
Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-what-chennai-has-to-learn-from-bangalore-388184.html